×

காரைக்குடியில் உடல் உறுப்புதானம் வழங்கும் முகாம்

காரைக்குடி, மே 6: காரைக்குடியில் டைம்ஸ் ஹெல்த் கேர், சாரிட்டபிள் டிரஸ்டின் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி சமூகஆர்வலர்கள் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கண், உடல் மற்றும் உறுப்பு தானம் வழங்கும் முகாம் நடந்தது. சமூக ஆர்வலர் இஸ்மாயில் வரவேற்றார். டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன் முன்னிலை வகித்தார். பிரபு டென்டல் கேர் டாக்டர் பிரபு துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் சரக டிஐஜி துரை கண், உடல் மற்றும் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். சாரிட்டபிள் டிரஸ் நிர்வாகி ரமேஷ்காந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கு பின் டாக்டர் குமரேசன் கூறுகையில், உடல் உறுப்பு தானத்தை பொறுத்தவரை இந்திய அளவில் தமிழ்நாட்டு முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 1817 பேர் உடல் உறுப்புதானம் வழங்கியுள்ளார்கள். இவர்கள் மூலம் 10827 பேர் பயன்பெற்றுள்ளனர். இம் முகாமில் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். தானம் வழங்க விரும்புபவர்கள் எங்கள் மருத்துவமனையில் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

The post காரைக்குடியில் உடல் உறுப்புதானம் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Times Health Care ,Charitable Trust ,Global Mission Hospital ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்